/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொடிகள் படர்ந்த பள்ளிக்கட்டடம்
/
கொடிகள் படர்ந்த பள்ளிக்கட்டடம்
ADDED : அக் 07, 2025 10:58 PM

மேட்டுப்பாளையம்; இலுப்பபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி கட்டடத்தில், கொடிகளும், மரங்களும் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இதனால் விஷ ஜந்துக்கள் பள்ளியின் உள்ளே செல்கிறது என, பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சிறுமுகையை அடுத்த லிங்காபுரம் செல்லும் வழியில், இலுப்பபாளையத்தில், அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், லிங்காபுரம், காந்தவயல், காந்தையூர், திம்மராயம்பாளையம் இலுப்பபாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
பள்ளியைச் சுற்றி சமூக ஆர்வலர்கள், நட்ட மரங்கள், பெரிதாக வளர்ந்துள்ளன. வகுப்பறை கட்டடத்தின் கழிவுநீர் குழாயில் கொடிகள் வளர்ந்து புதர் போல் உள்ளன.
இது குறித்து பெற்றோர் கூறியதாவது: புதிய பள்ளி கட்டடம் கட்டி சில ஆண்டுகள் தான் ஆகின்றன. ஆனால் பள்ளியைச் சுற்றி சரியாக சுத்தம் செய்யாததால், குப்பைகள் குவிந்து காணப்படுகின்றன. மரங்கள், செடிகள், கொடிகள் புதர் போல் வளர்ந்துள்ளன.
இந்த கொடிகள் வழியாக விஷ ஜந்துக்கள், பள்ளியின் உள்ளே வருவதாக குழந்தைகள் கூறுகின்றனர். எனவே பள்ளியை சுற்றி உள்ள குப்பைகளையும், கொடிகளையும் பள்ளி நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு பெற்றோர் கூறினர்.