ADDED : அக் 07, 2025 10:57 PM

அன்னுார்: திருநெல்வேலி மாவட்டத்தில், மனுஜோதி ஆசிரமம் செயல்படுகிறது. இந்த ஆசிரமம் சார்பில், 'ஆன்மீகப் பார்வையில் திருக்குறள்' என்னும் புத்தக வெளியீட்டு விழா அன்னுார் லாரி உரிமையாளர்கள் சங்க மண்டபத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் திருக்குறளில் சாதித்த மாணவி கீர்த்தி உள்ளிட்டோர் கவுரவிக்கப்பட்டனர். எழுத்தாளர் கே.ஜி. ஜவஹர் தலைமை வகித்தார். புத்தகத்தை வெளியிட்டு திருக்குறள் பேராசிரியர் சக்கரவர்த்தி பேசியதாவது :
2,000 ஆண்டுகளுக்கு முன்பே மனித சமுதாயத்திற்கு தேவையான அனைத்து கருத்துகளையும் கொண்டதாக திருக்குறள் உருவாகியுள்ளது. திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் சமுதாயத்தில் நிலவிய போட்டி, பொறாமை, சாதி, சமய வேறுபாடுக ளை பார்த்து சமுதாயத்திற்கு நன்னெறியை தெரிவிக்க திருக்குறளை எழுதியுள்ளார். இவ்வாறு, அவர் பேசினார்.
விழாவில் மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு இயக்க செயலாளர் சங்கமன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சவுந்தரராஜன், முன்னாள் ஊராட்சி தலைவர் தேவராஜன், கணபதி தமிழ்ச் சங்க நிறுவனர் நித்தியானந்த பாரதி உள்பட பலர் பேசினர். சான்றோர்கள் கவுரவிக்கப்பட்டனர்.