/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒற்றை யானை 'பிளிறல்' ஊரெல்லாம் 'அலறல்'
/
ஒற்றை யானை 'பிளிறல்' ஊரெல்லாம் 'அலறல்'
ADDED : பிப் 08, 2024 11:23 PM

பேரூர், - இரண்டு வாரங்களாக விவசாய பயிர்களை ஒற்றை யானை துவம்சம் செய்வதால், கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்டது நல்லுார் வயல், சப்பாணி மடை கிராமங்கள். இங்கு இரண்டு வாரங்களாக அடிக்கடி ஒற்றை யானை புகுந்து பயிர்களை சேதம் செய்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில், மணிகண்டன் என்பவரது தோட்டத்துக்குள் புகுந்து தென்னை மரங்களை அடியோடு சாய்ந்தது.
தங்கமணி என்பவரின் கரும்பு தோட்டத்தையும் சேதப்படுத்தியது. வனத்துறையினர் பல மணி நேரம் போராடி யானையை வனத்துக்குள் விரட்டினர்.
விவசாயி மணிகண்டன் கூறுகையில், ''எங்கள் கிராமங்களுக்குள் யானைகள் அடிக்கடி வருகின்றன. இதற்கு முக்கிய காரணம், யானைகள் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதே.
வனத்துறை மற்றும் வருவாய் துறை ஆய்வு செய்து யானை வழித்தடங்களை மீட்க வேண்டும். எங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். எங்கள் மொத்த உழைப்பையும் ஒரு நொடியில் யானைகள் வேரோடு சாய்த்து விடுகின்றன. பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடும் தருவதில்லை. சிறு குறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கிறோம்,'' என்றார்.

