/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வன விலங்குகள் பிரச்னைக்கு தீர்வு; விவசாயிகள் வலியுறுத்தல்
/
வன விலங்குகள் பிரச்னைக்கு தீர்வு; விவசாயிகள் வலியுறுத்தல்
வன விலங்குகள் பிரச்னைக்கு தீர்வு; விவசாயிகள் வலியுறுத்தல்
வன விலங்குகள் பிரச்னைக்கு தீர்வு; விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜன 15, 2024 10:31 PM
மேட்டுப்பாளையம்;வனவிலங்குகள் தாக்கி இறப்பவர்களின் குடும்பத்துக்கு, வழங்கப்படும் இழப்பீடு ஐந்து லட்சத்திலிருந்து, 10 லட்சம் ரூபாயாக உயர்த்திய, தமிழக முதல்வருக்கு தமிழக விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது.
அதே நேரத்தில் வனவிலங்குகள் பிரச்னைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணுகோபால் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
விவசாய நிலங்களில், வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரிப்பதால், பயிர் சேதமும், உயிர் சேதமும் அதிகரித்து வருகிறது. வனவிலங்குகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கவும், விவசாய பயிர்களை காப்பாற்றவும், ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காததால், நாளுக்கு நாள் வனவிலங்குகளின் தாக்குதல், அதிகரித்து வருகிறது.
வனவிலங்குகளை காப்பாற்றுவதாக சொல்லி, புதிது புதிதாக சட்டங்கள் போட்டு விவசாயிகளை தொல்லை படுத்துவது வேதனையாக இருக்கிறது. வனவிலங்குகள் தாக்கி உயிரிழப்பவர்கள் பெரும்பாலும், குடும்பத்தை வழிநடத்தும் குடும்ப தலைவர்களாக இருக்கிறார்கள்.
இ ருந்த போதும் வனவிலங்கு தாக்கி, இறந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகை, 5 லட்சத்திலிருந்து, 10 லட்சம் ரூபாயாக உயர்த்திய தமிழக முதல்வருக்கு, தமிழக விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது.
இருந்த போதும் வனவிலங்குகளை, வன எல்லைக்கு வெளியே வராமல் தடுத்து, மனித உயிரிழப்பையும், வனவிலங்கு உயிரிழப்பையும் தடுப்பது தான் சரியான தீர்வாகும். இதைத்தான் விவசாயிகளும், பொதுமக்களும் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எனவே வனவிலங்குகள் பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு ஏற்படுத்தி, மனித உயிர்களையும் விவசாய பயிர்களையும் காப்பாற்ற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் சங்கம், கோரிக்கை விடுக்கிறது. இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.