தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இரண்டு ஆண்டுகள் கோரிக்கைக்கு ஒரு வழியாக கிடைத்தது தீர்வு

 இரண்டு ஆண்டுகள் கோரிக்கைக்கு ஒரு வழியாக கிடைத்தது தீர்வு

 இரண்டு ஆண்டுகள் கோரிக்கைக்கு ஒரு வழியாக கிடைத்தது தீர்வு


ADDED : பிப் 19, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 05:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகராட்சி, 22வது வார்டில் தார் சாலை அமைக்க, இரண்டு ஆண்டுகளாக வைத்து வந்த கோரிக்கைக்கு தீர்வு கிடைத்துள்ளது.

மேட்டுப்பாளையம் நகராட்சி, 22வது வார்டில் உள்ள ஜெகநாதன் லே-அவுட், பெருமாள் லே--அவுட்டில் உள்ள மூன்று வீதிகளில், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து வீதிகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. வார்டு கவுன்சிலர் முத்துசாமி, நகரமன்ற கூட்டத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்த வீதிகளுக்கு தார் சாலை அமைக்க கோரிக்கை விடுத்து வந்தார். தார் சாலை அமைக்க நிதி ஒதுக்காமல் இருந்தனர்.

இந்நிலையில் வார்டு கவுன்சிலர், பொதுமக்கள் ஆகியோர், எம்.எல்.ஏ., செல்வராஜை சந்தித்து, தார் சாலை அமைக்க நிதி ஒதுக்க கோரிக்கை விடுத்தனர். தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து, தார் சாலை அமைக்க, ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதற்கான பூமி பூஜை, 22வது வார்டில் நடந்தது.

* வார்டு 30ல் திருவள்ளுவர் 2வது நகரில் மழை நீர் வடிகால் அமைக்க, ரூ.10 லட்சம், 10வது வார்டில் மழை நீர் வடிகால் அமைக்க ரூ.13 லட்சம், ஏழாவது வார்டு, எஸ்.எம்.நகர் பூவாத்தாள் லே அவுட்டில் மழை நீர் வடிகால் அமைக்க ரூ.12.50 லட்சம் என மொத்தம், ரூ.51.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இப்பணிகளுக்கான பூமி பூஜை, அந்தந்த வார்டில் நடந்தது. எம்.எல்.ஏ., செல்வராஜ், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் நாசர், நகர செயலாளர் வான்மதி சேட். கவுன்சிலர்கள் முத்துசாமி, தனசேகர், உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us