/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வஞ்சியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
/
வஞ்சியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED : பிப் 10, 2025 10:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, கோதவாடி ஊராட்சியில் குளத்தின் ஓரத்தில் அமைந்துள்ள வஞ்சியம்மன் கோவிலில், ஆண்டு தோறும் விவசாயிகள் மழை வேண்டி பிரார்த்தனை செய்வது வழக்கம்.
தற்போது, கோவில் திருப்பணிகள் முடிந்து, சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், சுவாமிக்கு, சிறப்பு யாகம் நடந்தது.
இதையடுத்து, கோ பூஜை மற்றும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

