sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

திரைப்பட ரசிகர்களுக்கு இன்று சிறப்பு விருந்து

/

திரைப்பட ரசிகர்களுக்கு இன்று சிறப்பு விருந்து

திரைப்பட ரசிகர்களுக்கு இன்று சிறப்பு விருந்து

திரைப்பட ரசிகர்களுக்கு இன்று சிறப்பு விருந்து


ADDED : ஜூலை 25, 2025 09:27 PM

Google News

ADDED : ஜூலை 25, 2025 09:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை ; திரைப்பட ரசிகர்களுக்கு, சிறப்பு விருந்தாக அமையப் போகிறது, ஒரு ஜெர்மன் திரைப்படம்.

ஜெர்மன் மொழியில், கடந்த 2009ல் வெளிவந்த ஒரு படம் சோல் கிச்சன். பைட்டி அகின் இயக்கிய நகைச்சுவை திரைப்படமான இதில், ஹம்பர்க்கில், ரெஸ்டாரன்ட்டின் உரிமையாளன், சமையல் கலைஞர் ஸீனோஸ் சந்திக்கும் சவால்களை விவரிக்கிறது.

ஹம்பர்க்கில் தொழிலாளர்களுக்கான உணவைத் தயாரித்து வழங்கும் இந்த ரெஸ்டாரன்ட், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அடுத்தது என்ன என்று மிக சுவாரஸ்யமாக நகர்த்துகிறது, இத்திரைப்படம்.

புதுப்பிக்கப்பட்ட உணவு விடுதி, கோலாகலமாக திறக்கப்படுகிறது. தன்னுடைய உணவு விடுதியை எப்படி ஸீனோஸ் மீட்கிறான்? என்பதே கதை. குறும்படம், ஆவணப் படம் இயக்குபவர்களுக்கும், நாளைய இயக்குநர்களுக்கும், இப்படம் மிகச்சிறந்த ஒரு திரைக்கதையை கொடுக்கும் என நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது. 2010 வெனிஸ் திரைப்பட விழாவின் பிரீமியர் காட்சியாக திரையிடப்பட்டது.

கோவை அவிநாசி சாலையில், கோதே சென்ட்ரம், மினி ஆடிட்டோரியத்தில், இன்று மாலை 5:00 மணியளவில், திரைப்படம் திரையிடப்படுகிறது. 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பார்க்க அனுமதி.

ஜெர்மன் மற்றும் ஆங்கில வசன வரிகள் கொண்டது. அனுமதி இலவசம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. விவரங்களுக்கு: 95855 46299, 95855 19471.






      Dinamalar
      Follow us