/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டு யானை தாக்கிய பெண் சிகிச்சை பலனின்றி மரணம்
/
காட்டு யானை தாக்கிய பெண் சிகிச்சை பலனின்றி மரணம்
ADDED : ஜூலை 25, 2025 09:27 PM
தொண்டாமுத்தூர் ; விராலியூரில், காலைக்கடன் கழிக்கசென்றபோது, ஒற்றைக்காட்டு யானை தாக்கிய பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட, விராலியூர், இந்திரா காலனியை சேர்ந்தவர் ரத்தினா, 53. கூலித்தொழிலாளி. இவர், நேற்றுமுன்தினம் அதிகாலை, 5:00 மணிக்கு, வீட்டின் அருகே உள்ள காலியிடத்தில், காலைக்கடன் கழிக்க சென்றுள்ளார்.
அங்கிருந்த ஒற்றை காட்டு யானை, ரத்தினாவை, தும்பிக்கையால் தூக்கி வீசியதில், பலத்த காயமடைந்தார். இதனையடுத்து, அருகிலிருந்தவர்கள், ரத்தினாவை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று, காலை சிகிச்சை பலனின்றி, ரத்தினா உயிரிழந்தார். வேட்டை தடுப்பு காவலர்களை அதிகப்படுத்தாமல், தொடர்ந்து அலட்சியமாக செயல்பட்டு வருவதாலே, தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.