/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதை பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்த கதை புத்தகம் வந்தாச்சு
/
போதை பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்த கதை புத்தகம் வந்தாச்சு
போதை பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்த கதை புத்தகம் வந்தாச்சு
போதை பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்த கதை புத்தகம் வந்தாச்சு
ADDED : ஜூலை 29, 2025 08:40 PM

கோவை; மாணவர்களிடம் போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 23 பக்கங்கள் கொண்ட சிறுகதை புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்காக, பள்ளிக்கல்வித்துறை சார்பில் இந்நூல் தயாரிக்கப்பட்டு, கோவையில் உள்ள 690 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, மாவட்டத்தில் 432 மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., 258 அரசு பள்ளிகளுக்கு, இந்த புத்தகம் வழங்கப்பட்டுள்ளது.
புத்தகத்தில் ஒன்பது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையிலும், போதை பொருட்களின் தீமைகளை வலியுறுத்தும் திருக்குறள் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் தடுப்பு மன்ற பொறுப்பாசிரியர்கள், செவ்வாய்தோறும் பள்ளி கூட்டு பிரார்த்தனையின் போது, இந்த சிறுகதைகள் மற்றும் தொடர்புடைய திருக்குறளைக் கூறி விளக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பள்ளிக்கும் பத்து புத்தகங்கள் வழங்க, மாவட்ட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.