/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவிக்கு தொல்லை முதியவருக்கு காப்பு
/
மாணவிக்கு தொல்லை முதியவருக்கு காப்பு
ADDED : நவ 25, 2024 04:52 AM
கோவை,: கோவையைச் சேர்ந்தவர் ராமசாமி, 60. சில நாட்களுக்கு முன் வீட்டில் 'டிவி' இயங்கவில்லை; சரி செய்து தருமாறு, அப்பகுதியில் உள்ள, 19 வயது கல்லுாரி மாணவியை அழைத்துள்ளார். மாணவி வீட்டிற்கு வந்து 'டிவி'யை சரிபார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது, முதியவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவி, முதியவரை தாக்கி அங்கிருந்து தப்பினார். இதுகுறித்து மாணவி, தன் தோழியர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சிலரிடம் கூறியுள்ளார்.
இதைக்கேட்ட அவர்கள், முதியவரின் வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளனர். அதற்கு அவர், தான் எதுவும் செய்யவில்லை என, தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், முதியவரை தாக்கி, சரவணம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். மாணவி அளித்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து முதியவரை சிறையில் அடைத்தனர்.