/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பல மடங்காக வளரும் மாணவர்களின் திறன்
/
பல மடங்காக வளரும் மாணவர்களின் திறன்
ADDED : அக் 04, 2024 11:30 PM
விஸ்வன்கர் பப்ளிக் பள்ளி, பசுமையான மற்றும் அமைதியான சூழலில், சிறுவாணி ரோட்டில் அமைந்துள்ளது. இங்கு, மழலையர் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் உள்ளன. அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், செயல்வழிக் கற்றல், நவீன உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன.
கராத்தே, ரோபோடிக்ஸ், சிலம்பம், வில்வித்தை, வீடியோ லேப் போன்ற கூடுதல் பாடத்திட்டங்கள் சிறப்பாக கற்பிக்கப்படுகின்றன. மாணவர்களின் உடல் மற்றும் மனநலனை மேம்படுத்தும் விளையாட்டு போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணர பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு பாட வல்லுனர்கள் வாயிலாக சிறப்பு வகுப்புகள், தொழில் வழிகாட்டுதல் வகுப்புகள் மற்றும் நீட், ஜே.இ.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
கடந்த 10 ஆண்டுகளாக சிறந்த கல்வியை அளித்து வரும் விஸ்வன்கர் பள்ளியில், வரும் விஜயதசமியன்று மாதம்பட்டி மற்றும் செல்வபுரம் பள்ளியில் வித்யாரம்பம் பூஜை, காலை 10:45 முதல் 11:45 மணி வரை நடக்கிறது. விபரங்களுக்கு, www.vishwankarschool.com மற்றும் 84385 78141 என்ற எண்ணில் அழைக்கலாம்.