/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேரளா வேர் வாடல் நோய் குறித்து கணக்கெடுப்பு இரு துறைகள் இணைந்து மேற்கொள்ள அறிவுரை
/
கேரளா வேர் வாடல் நோய் குறித்து கணக்கெடுப்பு இரு துறைகள் இணைந்து மேற்கொள்ள அறிவுரை
கேரளா வேர் வாடல் நோய் குறித்து கணக்கெடுப்பு இரு துறைகள் இணைந்து மேற்கொள்ள அறிவுரை
கேரளா வேர் வாடல் நோய் குறித்து கணக்கெடுப்பு இரு துறைகள் இணைந்து மேற்கொள்ள அறிவுரை
ADDED : பிப் 25, 2024 10:27 PM

பொள்ளாச்சி;''வேர்வாடல் நோய் குறித்து தோட்டக்கலை மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் இணைந்து கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்,' என ஆனைமலையில் கள ஆய்வுக்கு வந்த தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இணை இயக்குனர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னையில் வேர்வாடல் நோய் தாக்குதல் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள், மரங்களை வெட்டி சாய்த்து வருகின்றனர்.
இந்நிலையில், தென்னையில் வேர் வாடல் நோய் குறித்து தோட்டக்கலைத்துறை இயக்குனர் குமரவேல் பாண்டியன் மற்றும் அதிகாரிகள் குழுவினர், ஆனைமலை காளியப்ப கவுண்டன்புதுாரில் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து நடந்த கலந்துரையாடலில், தோட்டக்கலை இணை இயக்குனர் ராம்பிரசாத், வேளாண் பல்கலை பயிர் பாதுகாப்பு துறை இயக்குனர் சாந்தி, வேளாண் பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி, கோவை தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி, இணை வேளாண் இயக்குனர் (பொ) விஜய கல்பனா, தென்னை வளர்ச்சி வாரிய அதிகாரி ரகோத்தமன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
விவசாயிகள் தோட்டங்களுக்கு நேரிடையாகச்சென்று ஆய்வு செய்து, கணக்கெடுப்பு செய்வது குறித்து அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்.
தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், 16,500 ெஹக்டேர், தெற்கில், 10,800 ெஹக்டேர், ஆனைமலையில், 22,068 ெஹக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
அதில் வேர்வாடல் அதிகளவு பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் குறித்து கணக்கெடுப்பு பணிகள் கல்லுாரி மாணவர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது.
தற்போது, தோட்டக்கலைத்துறை இயக்குனர், தோட்டக்கலையுடன், வேளாண்துறையும் இணைந்து இப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்படி, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஒன்றியத்திலும், மூன்று குழுக்கள் தனியாக அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவில், வேளாண் அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்கள், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுக்களுக்கு வேளாண்மை உதவி இயக்குனர்கள், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்கள் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழு நேரடியாக தோட்டங்களுக்கு சென்றுவேர் வாடல் நோய் பாதிக்கப்பட்ட மரங்களை கண்டறிந்து கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும். பின்னர், ஆய்வு அறிக்கை இயக்குனருக்கு அனுப்பப்படும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

