/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொறாமை இல்லாத ஒரே இனம் ஆசிரியர்தான் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் புகழாரம்
/
பொறாமை இல்லாத ஒரே இனம் ஆசிரியர்தான் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் புகழாரம்
பொறாமை இல்லாத ஒரே இனம் ஆசிரியர்தான் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் புகழாரம்
பொறாமை இல்லாத ஒரே இனம் ஆசிரியர்தான் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் புகழாரம்
ADDED : ஆக 30, 2024 10:05 PM
கோவை;''மாணவர்கள் வளர்ச்சியில் பொறாமை கொள்ளாத ஒரே இனம் ஆசிரியர்கள்தான்,'' என, பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் பேசினார்.
பீளமேடு, கோபால் நாயுடு பள்ளியின், 50ம் ஆண்டு பொன் விழா கொண்டாட்டம் நேற்று துவங்கியது. நாளை வரை நடக்கும் விழாவில், மேஜிக் ஷோ, இசை நிகழ்ச்சி, நடனம் என பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. நேற்றைய துவக்க விழாவில், பள்ளி தாளாளர் ரவி சாம் தலைமை வகித்தார்.
பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் தன்னம்பிக்கை உரையாற்றியதாவது:
பள்ளி துவங்கி, 50 ஆண்டுகள் என்பது எண்ணிக்கைதான். ஆனால், இத்தனை ஆண்டுகளும் கரையற்ற சரித்திரம் படைத்துள்ளதுதான் பெருமைக்குரியது. பள்ளியின் வளர்ச்சிக்கு அடுத்த மைல்கல்லாக இன்று படிக்கும் மாணவர்கள் இருக்க வேண்டும்.
பொன் விழா காணும் இப்பள்ளி எவ்வளவு பிரச்னைகளை சந்தித்திருக்கும் என்று யூகிக்கலாம். வெளியே பேசுவது வெற்றியை மட்டுமே; வேதனைகளை அல்ல. எத்தனை முறை கீழே விழுந்தாலும், மேலே எழ கற்றுத்தருவது பள்ளிதான்.
மிக மகிழ்ச்சியான காலங்கள் பள்ளியில்தான் கிடைக்கும். மாணவர்கள் மகிழ்ச்சியை பார்த்து மனதார வாழ்த்துபவர்கள் பெற்றோரும், ஆசிரியர்களும்தான். மாணவர்கள் வளரும்போது ஆசிரியர்கள் மகிழ்வர். பொறாமை இல்லாத ஒரே இனம் ஆசிரியர்கள்தான்.
உங்கள் நலனுக்காக போராட்டம், பிரச்னைகளை கடந்து இந்த பள்ளி நிர்வாகம் நிற்கிறது. மாணவர்களாகிய நீங்கள் பல்வேறு துறைகளில் சாதனைகள் படைக்க வேண்டும். மீண்டும் பள்ளிக்கு திரும்ப வந்து தற்போது பயிலும் மாணவர்களுக்கு உங்கள் விரல்களை கொடுத்து துாக்கிவிட வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
பள்ளி தலைமையாசிரியர் சவுந்தர்ராஜ், மழலையர் பள்ளி தலைமையாசிரியர் வித்யா உட்பட பலர் பங்கேற்றனர்.