/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துாக்கத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
/
துாக்கத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
துாக்கத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
துாக்கத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
ADDED : செப் 23, 2024 12:09 AM
கோவை : பீகாரை சேர்ந்தவர் சப்ராஜ், 20. அவர் தனது உறவினர் ருஷ்டம், 22 என்பவருடன் சேர்ந்து கோவை சின்னியம்பாளையம் பகுதியில் தங்கியிருந்தனர்.. இருவரும் காளப்பட்டியை அடுத்த ஹில்ஸ் ரோட்டில் உள்ள ஒரு கட்டடத்தில், பெயின்டிங் வேலை செய்தனர்.
நேற்று முன்தினம் வழக்கம் போல, அந்த கட்டடத்தில் பணிகளை முடித்து இருவரும் துாங்க சென்றனர். ருஷ்டம் முதல் தளத்திலும், சப்ராஜ் மூன்றாவது தளத்திலும் படுத்து துாங்கினர். அப்போது சப்ராஜ் துாக்கத்தில், மூன்றாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் பலத்த காயம் அடைந்த சப்ராஜை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
ருஷ்டம் அளித்த புகாரின் பேரில், பீளமேடு போலீசார் மேஸ்திரி ராம் மற்றும் கான்டிராக்டர் அருண் ஆகியோர் மீது, தக்க பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணி வாங்கியதாக, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.