/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புளியம்பட்டி அருகே கோர விபத்தில் மார்பில் கம்பி பாய்ந்து வாலிபர் பலி
/
புளியம்பட்டி அருகே கோர விபத்தில் மார்பில் கம்பி பாய்ந்து வாலிபர் பலி
புளியம்பட்டி அருகே கோர விபத்தில் மார்பில் கம்பி பாய்ந்து வாலிபர் பலி
புளியம்பட்டி அருகே கோர விபத்தில் மார்பில் கம்பி பாய்ந்து வாலிபர் பலி
ADDED : அக் 19, 2024 10:17 PM

புன்செய்புளியம்பட்டி:கோவையிலிருந்து, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துக்கு, 40க்கும் மேற்பட்ட பயணியருடன், அரசு பஸ் நேற்று மதியம், 3:30 மணிக்கு புறப்பட்டது. டிரைவர் சிவலிங்கம், 43, பஸ்சை ஓட்டினார்.
புன்செய்புளியம்பட்டி அருகே புதுரோடு அரசு மறுவாழ்வு இல்லம் அருகே வளைவில், மாலை, 5:00 மணியளவில் திரும்பியது. அப்போது எதிரே அட்டை பாரம் ஏற்றி வந்த 'ஈச்சர்' லாரி, அரசு பஸ்சின் வலதுபுற பக்கவாட்டில் மோதியது.
இதில், லாரி டிரைவரான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கணேசன், 35; பஸ் பயணியர், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதில், பஸ்சின் வலது புறம் கடைசி இருக்கையில் ஜன்னலோரம் அமர்ந்து பயணித்த, சத்தி அருகே கொண்டப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த பழனிசாமி மகன் நதீஷ், 21, மீது, விபத்தில் உடைந்த அரசு பஸ்சின் பக்கவாட்டு கம்பி, மார்பில் குத்தி முதுகு வழியாக வந்து விட்டது.
கவலைக்கிடமான நிலையில் அவர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். விபத்தில் பலியான நதீஷ், சமீபத்தில் கல்லுாரி முடித்து, ஒரு கோச்சிங் சென்டரில் படித்து வந்ததாக, புன்செய்புளியம்பட்டி போலீசார் தெரிவித்தனர்.