ADDED : ஜன 14, 2024 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் வாலிபர் ஒருவர், ரத்த வெள்ளத்தில் கிடந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நேற்று, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று, மது அருந்திவிட்டு வந்த இரு வாலிபர்கள், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அதில், 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவருக்கு, உடல் முழுவதும் ரத்த காயங்கள் ஏற்பட்டது. இவர் பஸ் ஸ்டாண்டில் படுத்திருந்ததை கண்டு, பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேட்டுப்பாளையம் போலீசார், வாலிபரை மீட்டு, அரசு மருத்துவமனை அனுப்பி வைத்து, தாக்கிய நபரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.