/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேம்போர்டு பள்ளியில் சிந்தனை துாண்டும் நிகழ்வு
/
கேம்போர்டு பள்ளியில் சிந்தனை துாண்டும் நிகழ்வு
ADDED : நவ 13, 2025 12:42 AM

கோவை: கணபதி, கேம்போர்டு சர்வதேச பள்ளியில், 'இக்னைட் யங் மைண்ட்ஸ் 2025' என்ற வருடாந்திர நிகழ்வு நடந்தது. இளைஞர்களிடையே புதுமை, தைரியம் மற்றும் ஆர்வத்தை வளர்ப்பது, பாடப்புத்தகங்களுக்கு அப்பால் சிந்திக்க மாணவர்களை ஊக்குவிப்பது போன்ற, டாக்டர் கலாமின் கனவை நோக்கமாகக்கொண்டு, இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
முதலீட்டு வங்கியாளர் அருண் தயாநிதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மாணவர்களின் புதிய சிந்தனையை துாண்டும் வகையில், பல்வேறு நுண்ணறிவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
தொடர்ந்து நடந்த கேள்வி - பதில் அமர்வில், வணிக யோசனைகள், தொடக்கநிலை சவால்கள் மற்றும் மாறிவரும் உலகில் தலைமைத்துவத்திற்குத் தேவையான மனநிலை குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். பள்ளியின் தலைவர் அருள், தாளாளர் பூங்கோதை, ஆசிரியர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.

