/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போஸ்டல் பிரீமியர் லீக் 2.0 கிரிக்கெட்: போஸ்டல் பைரட்ஸ் அணி சாம்பியன்
/
போஸ்டல் பிரீமியர் லீக் 2.0 கிரிக்கெட்: போஸ்டல் பைரட்ஸ் அணி சாம்பியன்
போஸ்டல் பிரீமியர் லீக் 2.0 கிரிக்கெட்: போஸ்டல் பைரட்ஸ் அணி சாம்பியன்
போஸ்டல் பிரீமியர் லீக் 2.0 கிரிக்கெட்: போஸ்டல் பைரட்ஸ் அணி சாம்பியன்
ADDED : நவ 13, 2025 12:42 AM

கோவை: போஸ்டல் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், போஸ்டல் பைரட்ஸ் திருப்பூர் அணியினர் வென்று சாம்பியன் ஆயினர்.
மேற்கு மண்டல தபால் துறை நடத்தும் போஸ்டல் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் போட்டி, பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லுாரி மைதானத்தில் நடந்தது.
மேற்கு மண்டலத்தில் உள்ள 11 தபால் கோட்டங்களும், ஒரு ஆர்.எம்.எஸ்., கோட்டமும், மெயில் மோட்டார் சர்வீஸ் பிரிவு மற்றும் மண்டல அலுவலகம் சேர்ந்து 16 அணிகள் பங்கேற்றன.
முதல் அரையிறுதி போட்டியில், நாமக்கல் ராக்போர்ட் ராக்கர்ஸ் அணி, கோவை மான்செஸ்டர்ஸ் அணியை, ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்று, இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், போஸ்டல் பைரட்ஸ் திருப்பூர் அணி, ஈரோடு மஞ்சள் வாரியர்ஸ் அணியை, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வென்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதிப் போட்டியில், முதலில் ஆடிய நாமக்கல் அணியினர், ஏழு விக்கெட்களை இழந்து, 12 ஓவர்களில் 57 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்து விளையாடிய திருப்பூர் அணியினர், 10.2 ஓவரில் 61 ரன்கள் எடுத்து, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்று, முதல் முறையாக சாம்பியன் ஆயினர்.
மேற்கு மண்டல தபால் துறை தலைவர் சரவணன், அணிக்கு சுழற்கோப்பை வழங்கினார். இறுதிப் போட்டியில், 2 விக்கெட்கள் மற்றும் 3 கேட்ச்கள் பிடித்த போஸ்டல் பைரட்ஸ் திருப்பூர் அணியின் கவின் ஆட்ட நாயகனாகவும், கோவை மான்செஸ்டர் அணியின் தினேஷ், தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.
தொடர் ஏற்பாடுகளை செய்த, கோவை ஆர்.எம்.எஸ்., கோட்ட கண்காணிப்பாளர் ஜெயராஜ் பாபு மற்றும் கோவை தபால் கோட்ட கண்காணிப்பாளர் சிவசங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

