ADDED : நவ 13, 2025 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவில்மேடு மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவியருக்கு, சிலம்பம் கம்பு வழங்கப்பட்டது.
கோவையில் செயல்படும் செயல் அமைப்பு சார்பில், கோவில்மேடு மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவியர் 40 பேருக்கு, சிலம்பம் பயிற்சி வழங்கப்படுகிறது.
நடப்பு கல்வியாண்டில், மூன்று மாதங்களாக வழங்கப்படும் பயிற்சியில், மாணவியருக்கு, முதற்கட்ட பயிற்சி முடித்தவர்களுக்கு, சிலம்பம் கம்பு வழங்கப்பட்டது.
பள்ளி மாணவியர் சிறப்பாக கற்றுக் கொள்வதாக, அமைப்பு சார்பில் பெருமிதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் டிச. மாதம், பள்ளியில் படிக்கும், ஆர்வமுள்ள மாணவர்களுக்கும், இந்த அமைப்பு சார்பில் சிலம்பம் கற்றுத்தர முடிவு செய்யப்பட்டுள்ளது.

