/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராபி பருவத்துக்கு உரம் கையிருப்பு: வேளாண் இணை இயக்குனர் தகவல்
/
ராபி பருவத்துக்கு உரம் கையிருப்பு: வேளாண் இணை இயக்குனர் தகவல்
ராபி பருவத்துக்கு உரம் கையிருப்பு: வேளாண் இணை இயக்குனர் தகவல்
ராபி பருவத்துக்கு உரம் கையிருப்பு: வேளாண் இணை இயக்குனர் தகவல்
ADDED : நவ 13, 2025 12:40 AM
கோவை: கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் தமிழ்செல்வி அறிக்கை:
கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. விவசாயிகள் ராபி பருவ சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தென்னை, சோளம், மக்காச்சோளம், பழம் மற்றும் காய்கறிப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், இவற்றுக்குத் தேவையான ரசாயன உரங்கள் இருப்பில் உள்ளன.
யூரியா 1,456 டன், டி.ஏ.பி., 2,531 டன், பொட்டாஷ் 1897 டன், காம்ப்ளக்ஸ் 3894 டன், சூப்பர் பாஸ்பேட் 1492 டன், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைத்து, வினியோகம் செய்யப்படுகிறது.
வட்டார அளவில் அனைத்து உர விற்பனை நிலையங்களிலும், வேளாண் அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, தர பரிசோதனை மேற்கொள்கின்றனர்.
உர மூட்டையில் குறிப்பிட்டுள்ள, அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, உரிமம் பெறாத உரத்தை விற்பனை செய்வது, இணை பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்வது ஆகியவை கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உரத்தை, பி.ஓ.எஸ்., இயந்திரம் வாயிலாக மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

