/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுகுணா சர்வதேச பள்ளியில் விளையாட்டு விழா ஜோர்
/
சுகுணா சர்வதேச பள்ளியில் விளையாட்டு விழா ஜோர்
ADDED : நவ 13, 2025 12:39 AM
கோவை: காளப்பட்டி நேரு நகரில் உள்ள சுகுணா விளையாட்டு அரங்கில், சுகுணா சர்வதேச பள்ளியின் விளையாட்டு விழா நடந்தது.
கோவை என்.சி.சி., குழு தலைமையகத்தின் நிர்வாக அதிகாரி கர்னல். சுவாமி சிறப்பு விருந்தினராகவும், தமிழ்நாடு மற்றும் கேரள மண்டல தலைவர் அசோக்குமார் காசிராஜன் கவுரவ விருந்தினராகவும் பங்கேற்றனர்.
சுகுணா அறக்கட்டளை அறங்காவலர் ராஜாமணி அம்மாள், சுகுணா தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி, தாளாளர் சுகுணா, இணை நிர்வாக இயக்குனர் அனீஸ்குமார், சாந்தினி, இயக்குனர் அந்தோணிராஜ், முதல்வர் பத்மாவதி உட்பட பலர் பங்கேற்றனர்.
விளையாட்டு துறை செயலர் முகுந்த் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்கள், தேசியக்கொடி ஏற்றி விழாவை துவக்கி வைத்து, நிலம், நீர், காற்று, நெருப்பு முதலிய அணிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, பாராசூட் நடனம், ஏரோபிக்ஸ் நடனம், தற்காப்பு அணிவகுப்பு, சிலம்பாட்டம், ஓட்டப்பந்தயம், யோகா, மாணவர்களின் அணிவகுப்பு, மாணவியரின் நடனம் ஆகியவை நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவி அமிர்த தர்ஷிதா நன்றி கூறினார்.

