/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தாயுமானவர்' கணக்கெடுப்பை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
/
'தாயுமானவர்' கணக்கெடுப்பை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
'தாயுமானவர்' கணக்கெடுப்பை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
'தாயுமானவர்' கணக்கெடுப்பை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
ADDED : நவ 13, 2025 12:36 AM
கோவை: அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம், மாவட்ட கண்காணிப்பு அலுவலர், சுற்றுச்சுழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குநர் ராகுல்நாத் தலைமையில், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
இக்கூட்டத்தில் ராகுல்நாத் பேசியதாவது:
கோவையில் வளர்ச்சி பணிகளை, விரைந்து செயல்படுத்த வேண்டும். அரசு அறிவித்த திட்டங்கள் மற்றும் முதன்மை திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, செயல்படுத்த வேண்டும்.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, வருவாய்த்துறை, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட அரசுத்துறைகள் முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். முதல்வரின் தாயுமானவர் திட்டம் கணக்கெடுக்கும் பணிகளை, விரைந்து முடிக்க வேண்டும்.
இ--பட்டாக்கள் மற்றும் ஆன்லைன் பட்டாக்கள் வழங்குவதை வேகப்படுத்த வேண்டும். கோவை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடந்து வரும் சாலைப்பணிகள், உள்ளிட்ட வளர்ச்சித்திட்டப் பணிகளை, விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி)சங்கேத் பல்வந்த் வாகே, மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரசாந்த், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஸ்வநாதன், மகளிர் திட்ட இயக்குநர் மதுரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

