/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐடியா சொல்ல ஆயிரம் பேர் வருவாங்க... வடிவமைப்பில் நமக்குதான் கவனம் வேண்டும்!
/
ஐடியா சொல்ல ஆயிரம் பேர் வருவாங்க... வடிவமைப்பில் நமக்குதான் கவனம் வேண்டும்!
ஐடியா சொல்ல ஆயிரம் பேர் வருவாங்க... வடிவமைப்பில் நமக்குதான் கவனம் வேண்டும்!
ஐடியா சொல்ல ஆயிரம் பேர் வருவாங்க... வடிவமைப்பில் நமக்குதான் கவனம் வேண்டும்!
ADDED : பிப் 09, 2024 11:54 PM

வீடு கட்டவேண்டும் என தீர்மானித்ததும், முதலில் செய்ய வேண்டியது நாம் விரும்பும் படியான வீட்டின் வரைபடத்தை தீர்மானிப்பதுதான்.
புதிய வீடு கட்டுவோர், அதற்கான வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கின்றனர். இதற்காக, பல்வேறு வழிமுறைகளை கடைபிடிக்கின்றனர்.
முந்தைய காலங்களில், கட்டட வடிவமைப்பாளர் பரிந்துரைக்கும் விதத்தில் தான் ஒவ்வொரு கட்டடத்தின் வெளிப்புற தோற்றமும் இருக்கும்.
நம் இன்ஜினியர், நம் உறவுகளில் சொந்த வீடு கட்டியவர்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் என எல்லோரும் சொல்லும் ஐடியாவை, நாமும் கேட்டுக்கொள்வோம். ஆனால் தற்போது மக்கள் இந்த விஷயத்தில், பல்வேறு சொந்த கருத்துகளை தெரிவிக்கும் நிலைக்கு வந்துள்ளனர்.
முப்பரிமாண வரைபடம்
ஒரு கட்டடம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெரிவிப்பதில், அதன் உரிமையாளரின் பங்களிப்பு தற்போது தவிர்க்க முடியாததாக உள்ளது. மாதிரி வரைபடங்கள் முப்பரிமாண வடிவத்திலும் உள்ளன. இதில் கட்டட வடிவமைப்பாளரிடம் செல்லும் முன், ஏராளமான மாதிரிகளை பரிசீலிப்பதில், உரிமையாளர்கள் ஈடுபாடு காட்டுகின்றனர்.
அந்த மாதிரிகள் பார்க்கவும் அழகாய், அம்சமாய் தொடர்ந்து செய்வதற்கு ஏற்றதாய் இருத்தல் அவசியம். முக்கியமாக, சிக்கனமாகவும் இருக்க வேண்டும் என நினைக்கின்றனர்.
இதற்காக, கணினியில் விரிவான தேடலில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு உதவும் பல்வேறு தனியார் இணையதளங்கள் கட்டடங்களின் மாதிரி தோற்றங்களை வெளியிட்டுள்ளன.
இதை மறக்காதீங்க!
இவ்வாறு கணினி வழியே, புதிய வடிவமைப்புகளை தேடுவது நல்ல முயற்சி தான். ஆனால் இதில் சில அடிப்படை வழிமுறைகளை, கவனமாக பார்க்க வேண்டியது அவசியம்.
குறிப்பாக, உங்கள் வீட்டு வடிவமைப்பிற்கு ஒரு நல்ல வரைத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, அது நிறுவப்படும் இடத்தின் தன்மை ஆகும்.
இணையதளங்கள், அனைத்து பகுதிகளுக்கும் ஏற்ற வகையிலேயே கட்டட வடிவமைப்புகளை வெளியிடுகின்றன. இதில் சில இணையதளங்கள், எத்தகைய பகுதிக்கு இந்த வடிவமைப்பு பொருத்தமாக இருக்கும் என்பதை குறிப்பிடுகின்றன.
இவ்வாறு நீங்கள் தேர்ந்தெடுத்தாலும், கட்டட வடிவமைப்பாளரின் வழிகாட்டுதலை கவனத்தில் வைத்து செயல்படுவது அவசியம். தொழில்நுட்ப ரீதியாக, விதிகளுக்கு உட்பட்டு வடிவமைப்புகள் இருப்பது அவசியம்.
படுக்கையறைகள், நடைபாதைகள், குளியலறைகள், சமையலறை, கேரேஜ் மற்றும் அடித்தளம் ஆகியவற்றின் அமைப்பு மற்றும் ஏற்பாடு ஆகியவை, துல்லியமான அளவீடுகளுடன் உங்கள் வீட்டின் திட்டங்களில் சரியாகக் காட்டப்பட வேண்டும் என்கின்றனர் கட்டட வடிவமைப்பாளர்கள்.