/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயனின்றி கிடக்கும் வழிகாட்டி பலகை
/
பயனின்றி கிடக்கும் வழிகாட்டி பலகை
ADDED : நவ 22, 2025 05:25 AM

வால்பாறை: வால்பாறையில், சாலையோரம் பயனின்றி கிடக்கும் வழிகாட்டி பலகையால், வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
வால்பாறையில் இருந்து, பொள்ளாச்சி செல்லும் ரோட்டில் அமைந்துள்ளது அய்யர்பாடி ரோப்வே. இங்குள்ள, 40வது கொண்டை ஊசி வளைவில் மூன்று ரோடுகள் பிரிகின்றன.
பொள்ளாச்சி, வால்பாறை, கருமலை பாலாஜி கோவில் போன்ற பகுதிகளுக்கு செல்லும் மூன்று ரோடுகள் சந்திக்கும் இடத்தில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டிருந்தது. ரோடு விரிவாக்க பணி மற்றும் ரவுண்டானா அமைக்கும் பணிக்காக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வழிகாட்டி பலகையை அகற்றினர்.
இப்பணிகள் நிறைவடைந்து நான்கு மாதத்திற்கு மேலாகியும், இதுவரை வழிகாட்டி பலகை அந்த இடத்தில் அமைக்கப்படவில்லை. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், வாகன ஓட்டுநர்களும், சுற்றுலா பயணியரும் அதிருப்தியடைந்துள்ளனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் உள்ள, 40வது கொண்டைஊசி வளைவில் தற்போது சிறிய அளவிலான வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது. கழட்டி வைக்கப்பட்ட வழிகாட்டி பலகை, மீண்டும் அதே இடத்தில் வைப்பதில் ஆள் பற்றாக்குறையினால் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் வழிகாட்டி பலகை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

