/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மரத்திலிருந்து தவறி விழுந்தவர் பலி
/
மரத்திலிருந்து தவறி விழுந்தவர் பலி
ADDED : பிப் 16, 2024 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் அருகே ஒன்னிபாளையத்தில் தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்தவர் இறந்தார்.
காரமடை சிக்காரம்பாளையத்தில் வசித்தவர் ஈஸ்வரன், 40; கூலித் தொழிலாளி. கடந்த, 2ம் தேதி ஒன்னிபாளையத்தில் தென்னை மரம் ஏறிய போது, தவறி விழுந்து காயம் அடைந்தார்.
கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.