/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெகமத்தில் குழந்தை கடத்துவதாக வீடியோ பரவியதால் பரபரப்பு
/
நெகமத்தில் குழந்தை கடத்துவதாக வீடியோ பரவியதால் பரபரப்பு
நெகமத்தில் குழந்தை கடத்துவதாக வீடியோ பரவியதால் பரபரப்பு
நெகமத்தில் குழந்தை கடத்துவதாக வீடியோ பரவியதால் பரபரப்பு
ADDED : மார் 15, 2024 12:27 AM
நெகமம்;நெகமம், கப்பளாங்கரை பகுதியில் குழந்தை கடத்தப்பட்டதாக, சமூக வலைதளத்தில் வீடியோ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெகமம் அருகே உள்ள கப்பளாங்கரை கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் நேற்று, சமூக வளைதளம் வாயிலாக, வட மாநிலத்தவர் ஒருவர் கப்பளாங்கரை பகுதியில், குழந்தையை கடத்திச்செல்வதாக வீடியோ பதிவு ஒன்று வைரலானது. இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், இந்த வீடியோவில், வட மாநிலத்தவரை பொதுமக்கள் சரமாரியாக தாக்குவது போல் இருந்தது. இந்த வீடியோ பற்றி, நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீடியோவை பார்த்த போலீசார், அது போலியான வீடியோ என தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, அப்பகுதி மக்களிடையே இது போன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை என, தெரிவிக்கப்பட்டது.
பழைய வீடியோவை அப்பகுதியில் பகுதியில் நடந்தது எனக்கூறி, சமூக வளைதளம் வாயிலாக பரவிய தகவல், முற்றிலும் தவறானது என கூறப்பட்டது. இதை நம்ப வேண்டாம் என போலீசார் தெரிவித்தனர். இந்த வீடியோ பதிவு வைரலானதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

