/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு
/
மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு
ADDED : ஜூலை 30, 2025 09:17 PM

கோவை; கற்பகம் நிகர்நிலை பல்கலையின், பொறியியல் புலம் சார்பில், முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடந்தது.
சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற தைவான் பேராசிரியர் ஜிங் ஜோ டாங்சர்வதேச பொறியியல் கல்வி மற்றும் பண்பாட்டு பரிமாற்றம் குறித்தும், எல்.டி.ஐ. மைண்ட் ட்ரீ மூத்த இயக்குனர் ஹரிணி சம்பத் குமார், தலைமை மற்றும் தகவமைப்புத் திறன், தொடர்ந்து கற்றலின் அவசியத்தை வலியுறுத்தியும், மாணவர்களுக்கு ஊக்கம் அளித்தார்.
அமெரிக்கா, டெராடேட்டா மூத்த மேலாளர் கார்த்திகேயன் முருகையா, தொழில்நுட்பத் துறையின் புதிய வளர்ச்சிகள் மற்றும் தொழில் நுட்ப நிலைகளில் முன்னேறங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
கற்பகம் பல்கலை தலைவர் வசந்தகுமார், பதிவாளர் பிரதீப், பொறியியல் துறை முதல்வர் அமுதா மற்றும் துறைதலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.