/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூதாட்டியை தாக்கிய காட்டு யானை
/
மூதாட்டியை தாக்கிய காட்டு யானை
ADDED : மார் 15, 2024 12:44 AM
தொண்டாமுத்துார்;மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட, தீத்திபாளையம், கரடிமடை, குப்பனுார், பெருமாள் கோவில்பதி உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி விளை நிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு, கரடிமடை மாரியம்மன் கோவில் அருகே உள்ள தோட்டத்து வீட்டின் வாசலில், நாகம்மாள்,70 என்பவர் தூங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவில் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை, வீட்டின் வாசலில் தூங்கி கொண்டிருந்த நாகம்மாளை தாக்கி, தூக்கி வீசியது.
இதில், நாகம்மாளுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அப்போது, நாகம்மாள் கணேசா காப்பாத்து என, கூறி சப்தமிட்டுள்ளார். அதன்பின், ஒற்றை காட்டு யானை, அங்கிருந்து நகர்ந்து, அருகில் உள்ள தோட்டத்திற்குள் புகுந்தது.

