/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துாங்கிய நபரை தாக்கி கொன்றது காட்டு யானை
/
துாங்கிய நபரை தாக்கி கொன்றது காட்டு யானை
ADDED : அக் 01, 2024 05:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்துார்; கோவை மாவட்டம், நரசீபுரம் தர்மராஜா கோவில் வீதியைச் சேர்ந்தவர் சந்திரன், 47, கூலித் தொழிலாளி.
திருமணமாகி, இரு மகன்கள் உள்ளனர். வீட்டின் அருகே உள்ள மரத்தின் அடியில், நேற்று முன்தினம் இரவு துாங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 12:30 மணியளவில் காட்டு யானை ஒன்று வந்தது. சத்தம் கேட்டு கண் விழித்த சந்திரன் எழுந்து ஓட முயன்றார்.
ஆனால் அந்த யானை, சந்திரனை துரத்திச் சென்று காலால் அழுத்தியும், தந்தத்தால் குத்தியும் கொன்றது. தகவலறிந்து வந்த வனத்துறையினர், காட்டு யானையை வனப்பகுதிக்கு விரட்டினர்.