/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனியார் பஸ் மோதியதில் ஸ்கூட்டரில் சென்ற பெண் பலி
/
தனியார் பஸ் மோதியதில் ஸ்கூட்டரில் சென்ற பெண் பலி
ADDED : பிப் 02, 2024 10:49 PM
பாலக்காடு:பாலக்காட்டில், தனியார் பஸ் மோதியதில், ஸ்கூட்டரில் சென்ற பெண் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் சித்துாரை சேர்ந்த வேணுகோபாலின் மனைவி அம்பிகாதேவி, 44. இவர், நேற்று காலை, 10:00 மணிக்கு, ஸ்கூட்டரில் சித்துாரில் இருந்து பாலக்காடு நகரை நோக்கி சென்றார்.
அப்போது, பாலக்காடு நகராட்சி அலுவலகம் முன், ஸ்கூட்டர் மீது பின்னால் வந்த தனியார் பஸ் மோதியது. இதில் அம்பிகாதேவி மீது அதே பஸ்சின் சக்கரம் ஏறியது. இதில், அவர் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி இறந்தார்.
தகவல் அறிந்து வந்த பாலக்காடு டவுன் தெற்கு போலீசார், உடலை மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து, வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

