/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உலக உருண்டையை தாங்கும் மர மனிதன் வடகோவை சிந்தாமணியில் கவரும் சிலை
/
உலக உருண்டையை தாங்கும் மர மனிதன் வடகோவை சிந்தாமணியில் கவரும் சிலை
உலக உருண்டையை தாங்கும் மர மனிதன் வடகோவை சிந்தாமணியில் கவரும் சிலை
உலக உருண்டையை தாங்கும் மர மனிதன் வடகோவை சிந்தாமணியில் கவரும் சிலை
ADDED : டிச 23, 2024 04:09 AM

கோவை : வடகோவை சிந்தாமணி 'ரவுண்டானா'வில், வாகன ஓட்டிகளை கவர்ந்திழுக்கும் வகையில், 'உலக உருண்டையை தாங்கும் மர மனிதன்' சிலை நிறுவப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் ரேஸ்கோர்ஸ், சுங்கம் ரவுண்டானா, ப்ரூக் பீல்ட்ஸ் ரோடு உள்ளிட்ட இடங்களில் சாலைத்தீவு திடல்கள் மேம்படுத்தப்பட்டன. மேலும் 15 இடங்களில் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
அதில், வடகோவை சிந்தாமணி பகுதியில், தானியங்கி சிக்னல் முறை அகற்றப்பட்டு, மாநகராட்சியால் 'ரவுண்டானா' அமைக்கப்பட்டது, அதில், 'உலக உருண்டையை தாங்கும் மர மனிதன்' சிலை நிறுவப்பட்டிருக்கிறது.
புவி வெப்பமயமாதலை தவிர்க்க மரங்கள் நட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், மர மனிதன் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், உக்கடம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள 'ரவுண்டானா'வில், 'ஏர் உழும் விவசாயி' சிலை நிறுவும் பணி நடந்து வருகிறது.
அடுத்த கட்டமாக, சுங்கம் செல்லும் ரோட்டில் உள்ள ரவுண்டானா, லாலி ரோடு ரவுண்டானா, கலெக்டர் அலுவலகம் எதிரே மற்றும் விளாங்குறிச்சி ரோட்டில் சாலைத்தீவு திடல்கள் மேம்படுத்தும் பணியை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.