ADDED : ஜூலை 14, 2025 11:14 PM
சூலுார்; சூலுார் அருகே வாலிபர்கள் இடையே நடந்த தகராறில், ஒரு வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
சூலுார் அடுத்த பள்ளபாளையம் விநாயகர் கோவில் அருகே நேற்று முன்தினம் இரவு இரு வாலிபர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு பைக்கில் வந்த இருவர், திடீரென வாலிபர்களை அரிவாளால் தாக்கினர்.
இதில்,செந்தில் என்ற வாலிபருக்கு காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டதால், அரிவாளுடன் வந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சூலுார் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், இரு கும்பலுக்கும் ஏற்கனவே முன் பகை இருந்ததாகவும், சம்பவத்தன்று ஒரு கும்பலை சேர்ந்த நபர் ஓட்டி வந்த பைக், மற்றொரு கும்பலை சேர்ந்தவரின் டெம்போவில் மோதியதாகவும், அப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த சென்ற நபர்கள், மேலும் சிலருடன் வந்து அரிவாளால் வெட்டி தப்பியுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.