/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆடாதொடா, நொச்சி நாற்றுகள் இன்று முதல் வினியோகம்
/
ஆடாதொடா, நொச்சி நாற்றுகள் இன்று முதல் வினியோகம்
ADDED : அக் 14, 2025 12:18 AM
ஆனைமலை;ஆனைமலை வட்டாரத்தில், ஆடாதொடா, நொச்சி நாற்றுகள் இன்று முதல் வினியோகம் செய்யப்படுகிறது, என வேளாண் துறை தெரிவித்துள்ளது.
ஆனைமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் விவேகானந்தன் அறிக்கை:
ஆனைமலையில் வேளாண்துறையின், ஒருங்கிணைந்த வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில், முதல்வரின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ், நாற்றுகள் வழங்கப்படுகிறது.
சித்த மருத்துவத்தில் சளி, இருமல், காய்ச்சல் நோய்களுக்கு, 'வரும் முன் காப்போம்' வாக்கின்படி பயன்படும் ஆடாதொடா, நொச்சி ஆகிய நாற்றுகள், இன்று முதல் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யும் நிலையில் தயாராக உள்ளது.
ஒரு விவசாயிக்கு அதிகபட்சம், 10 எண்கள் ஆடாதொடா, நொச்சி நாற்றுகள் வழங்கப்படும். மேலும், உழவன் செயலி வாயிலாக பதிவு செய்யும் விவசாயிகளுக்கே முன்னுரிமை அளித்து வழங்கப்படும்.
ஆர்வம் உள்ள விவசாயிகள், இந்த நாற்றுக்களை பெற்று வளர்த்து மழைக்கால தொற்று நோய் கிருமிகளிடமிருந்து தங்களை பாதுகாத்து பயன்பெறலாம்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.