/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பதிவு முகாம்
/
பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பதிவு முகாம்
ADDED : பிப் 27, 2024 11:22 PM
உடுமலை;பள்ளிகல்வித்துறையின் சார்பில், மாணவர்களுக்கான ஆதார் புதுப்பித்தல் மற்றும் புதிய பதிவுக்கான முகாம், உடுமலையில் நடக்கிறது.
உடுமலை வட்டாரத்துக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு, சத்திரம் வீதி நகராட்சி துவக்கப்பள்ளியில் முகாம் நடக்கிறது.
முகாமில், ஒன்று முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள், மாணவர்கள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கு, புதிய ஆதார் பதிவு செய்யப்படுகிறது. 5, 6 மற்றும் 7 வயதுள்ளவர்கள், 15, 16 மற்றும் 17 வயதுள்ளவர்களுக்கு ஆதார் புதுப்பிக்கப்படுகிறது. காலை, 9:30 மணி முதல், 4:30 மணி வரை, பள்ளி வேலை நாட்களில் முகாம் நடக்கிறது.
புதிதாக ஆதார் எடுப்பவர்கள் மற்றும் புதுப்பித்தல் உள்ள மாணவர்கள், அவர்களின் பெற்றோருடன் வந்து, முகாமை பயன்படுத்திக்கொள்ள கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

