/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போஸ்ட் ஆபீசில் செயல்பட்ட ஆதார் சேவை திடீர் நிறுத்தம்
/
போஸ்ட் ஆபீசில் செயல்பட்ட ஆதார் சேவை திடீர் நிறுத்தம்
போஸ்ட் ஆபீசில் செயல்பட்ட ஆதார் சேவை திடீர் நிறுத்தம்
போஸ்ட் ஆபீசில் செயல்பட்ட ஆதார் சேவை திடீர் நிறுத்தம்
ADDED : மே 29, 2025 11:38 PM
வால்பாறை; வால்பாறையில், ஆதார் அட்டையில் உள்ள பிழைகளை திருத்த, தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இ- சேவை மையங்களுக்கு சென்று, மக்கள் காத்திருக்கும் நிலை உள்ளது.
இந்நிலையில், வால்பாறை போஸ்ட் ஆபீசில், ஆதார் பதிவு சேவை துவங்கப்பட்டது. ஆதாரில் திருத்தம் மேற்கொள்ள, 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. போஸ்ட் ஆபீசில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இயங்கி வரும் ஆதார் சேவை பிரிவுக்கு, ஆள் நியமிக்காததால், இங்கு பணிபுரியும் ஊழியர்களே கூடுதல் பணியாக இதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக,நெட் ஒர்க் பிரச்னை மற்றும் பணியாளர் பற்றாக்குறையால், ஆதார் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால், இந்த சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
போஸ்ட் மாஸ்டர் கீதாஞ்சலியிடம் கேட்ட போது, ''வால்பாறை போஸ்ட் ஆபீசில், நெட் ஒர்க் பிரச்னையால் ஆதார் பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. ஆதார் பதிவு செய்ய ஊழியர்களும் தனியாக நியமிக்கப்படவில்லை.
''மேலும், ஊழியர்களுக்கான பயிற்சி நடைபெறுவதால், தற்காலிகமாக ஆதார் பதிவு செய்யும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளி துவங்கும் முன், ஆதார் சேவை வழக்கம் போல் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.