/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதார் சிறப்பு முகாம் நிறைவு; மத்திய அரசு சாதனை குறித்து பிரசாரம்
/
ஆதார் சிறப்பு முகாம் நிறைவு; மத்திய அரசு சாதனை குறித்து பிரசாரம்
ஆதார் சிறப்பு முகாம் நிறைவு; மத்திய அரசு சாதனை குறித்து பிரசாரம்
ஆதார் சிறப்பு முகாம் நிறைவு; மத்திய அரசு சாதனை குறித்து பிரசாரம்
ADDED : ஏப் 02, 2025 06:55 AM
அன்னுார்; பச்சாபாளையத்தில் ஆதார் சிறப்பு முகாம் மற்றும் தெருமுனைப் பிரசாரம் நடந்தது.
பச்சாபாளையம் பா.ஜ., சக்தி கேந்திரம் சார்பில், பச்சாபாளையத்தில், ஒரு வாரமாக ஆதார் சிறப்பு முகாம் நடந்தது. புதிய ஆதாருக்கு விண்ணப்பித்தல், முகவரி மாற்றம் செய்தல், மொபைல் எண் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் கடந்த ஒரு வாரமாக வழங்கப்பட்டன. இதன் நிறைவு நிகழ்ச்சியும், தெருமுனைப் பிரசாரமும் நடந்தது.
இதில் பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து பேசுகையில், ''மத்திய அரசு, தமிழகத்துக்கு, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம் என பல்வேறு துறைகளுக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
இலவச காஸ் இணைப்பு மற்றும் ஜல்ஜீவன் திட்டத்தில், அனைத்து வீடுகளுக்கும், குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது, என்றார்.
மத்திய அரசின் சாதனைகளை பா.ஜ., தெற்கு ஒன்றிய தலைவர் ரத்தினசாமி தெரிவித்தார். சக்தி கேந்திர பொறுப்பாளர் பிரகாஷ், நிர்வாகிகள் பழனிசாமி, சத்தியராஜ், திருகுமாரசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.