/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதார் சிறப்பு முகாம் நீட்டிப்பு
/
ஆதார் சிறப்பு முகாம் நீட்டிப்பு
ADDED : டிச 10, 2024 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை,; போத்தனூர் கேரள சமாஜம் வளாகத்தில், போத்தனூர் ரயில் பயனாளர்கள் சங்கம் சார்பில் ஆதார் திருத்த சிறப்பு முகாம் நேற்று துவங்கியது. அஞ்சலக கண்காணிப்பாளர் சிவசங்கர் முகாமைத் துவக்கி வைத்தார். முதல்நாளான நேற்று 410 பேர் பதிவு செய்தனர்; 170 பேருக்கு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தந்ததால், இரண்டு நாட்களுக்கு என அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு முகாம், வரும் 13ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என, ரயில் பயனாளர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

