/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தபால்துறை சார்பில் ஆதார் சிறப்பு முகாம்கள்
/
தபால்துறை சார்பில் ஆதார் சிறப்பு முகாம்கள்
ADDED : ஜூன் 12, 2025 10:21 PM
கோவை; 'தங்கள் பகுதியில் ஆதார் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று விரும்புவோர், அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகலாம்' என, அழைப்பு விடப்பட்டுள்ளது.
கோவை அஞ்சல் கோட்டத்தில், பல்வேறு தபால் அலுவலகங்களில் ஆதார் சேவை வழங்கப்பட்டு வருகின்றது.
இதன்படி, காலை 8:00 முதல் மாலை 8:00 மணி வரை, கோவை தலைமை அஞ்சலகம் மற்றும் ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சலகங்களில் ஆதார் சேவை வழங்கப்படுகிறது.
காலை 8:00 மணியிலிருந்து பிற்பகல் 3:00 மணி வரை, ஒண்டிப்புதுார், காலை 8:00 முதல் பிற்பகல் 3:30 வரை, ரெட்பீல்ட்ஸ், வேலாண்டிபாளையம், பீளமேடு, மதுக்கரை, காலை 8:00 முதல் மாலை 4:00 மணி வரை தொண்டாமுத்துார் ஆகிய அஞ்சலகங்களில் ஆதார் சேவை வழங்கப்படுகிறது.
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை, ராம்நகர், ஸ்ரீ அவிநாசிலிங்கம் மனையியல் கல்லுாரி, கவுண்டம்பாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயம், ராமநாதபுரம், சிங்காநல்லுார், சர்கார்சாமகுளம், குப்பகோனாம்புதுார், கோவை விமான நிலையம் ஆகிய பகுதி அஞ்சலகங்களில், ஆதார் சேவை வழங்கப்படுகிறது.
காலை 9:30 முதல் 4:30 வரை, ரயில் நிலைய வளாகத்தில் உள்ள மத்திய அஞ்சலகம், டாடாபாத், கணபதி, காலை 9:30 முதல் 3:00 மணி வரை, பேரூர், காலை 9:30 முதல் மாலை 5:30 வரை, சரவணம்பட்டி ஆகிய அஞ்சலகங்களில் சேவை வழங்கப்படுகிறது. சரவணம்பட்டி அஞ்சலகம், தற்போது சத்தி சாலையில் (எஸ்.ஆர்.பி., மில்ஸ் பஸ் ஸ்டாப் அருகில்) மாற்றப்பட்டுள்ளது.
காலை 10:00 முதல் மாலை 4:00 வரை போத்தனுார், காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை, கோவை கலெக்டர் வளாக அஞ்சலகம், பூ மார்க்கெட் அருகில் உள்ள ஆர்.எஸ்.புரம் கிழக்கு அஞ்சலகத்தில் சேவை வழங்கப்படுகிறது. ஆதார் சேவை என்பது சற்று நேரம் எடுக்கும் வகையில் அமைந்துள்ளதால், அஞ்சலக ஆதார் மையங்களில் காலை நேரங்களில் அதிக கூட்டம் இருக்கின்றது.
இரு தலைமை அஞ்சலங்களில், இரவு 8:00 மணி வரை நீட்டிக்கப்பட்ட ஆதார் சேவையையும் மற்றும் பல்வேறு அஞ்சலகங்களில் வழங்கப்படும் ஆதார் சேவையையும், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தங்கள் பகுதியில் ஆதார் சிறப்பு முகாம் நடத்த விரும்புவோர், அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகலாம் என, கோவை தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சிவசங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.