/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்; நீர்நிலைகளில் படையலிட்டு வழிபாடு
/
ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்; நீர்நிலைகளில் படையலிட்டு வழிபாடு
ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்; நீர்நிலைகளில் படையலிட்டு வழிபாடு
ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்; நீர்நிலைகளில் படையலிட்டு வழிபாடு
ADDED : ஆக 03, 2025 09:45 PM

தொண்டாமுத்துார்; ஆடிப் பெருக்கான நேற்று கோவையில் நொய்யல் பாயும் பகுதிகளில் இலை போட்டு பல வகையான உணவுகள், பழங்கள் படைத்து, தீபாராதனை காட்டி மக்கள் வழிபட்டனர். ஆற்றில் பூக்களை துாவி வழிபட்டனர்.
பஞ்சபூதங்களில் முக்கியமானது நீர், நீரில் இருந்து உயிரினம் தோன்றியதாக நம்பிக்கை.
அதனாலே நீரை போற்றி, வணங்கி, நீருக்கும், ஆறுகள் போன்ற நீர் நிலைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது.
ஆடி 18ம் பெருக்கான நேற்று நொய்யலாறு பாயும் பகுதிகளான, தெலுங்குபாளையம், செல்வபுரம், குறிச்சி, குனியமுத்துார், வேடபட்டி உள்ளிட்ட கரையோர பகுதிகளில் இலை போட்டு பல வகையான உணவுகள், பழங்கள் படைத்து, தீபாராதனை காட்டி வழிபட்டார்கள்.
பேரூர் படித்துறையில், நேற்று அதிகாலை முதலே பொதுமக்கள் குவிய துவங்கினர். படித்துறை படிக்கட்டில், தலைவாழை விரித்து, அதில், ஏழு கூழாங்கற்களை சப்த கன்னிமார்களாக பாவித்து, மிட்டாய், முறுக்கு போன்ற பலகாரங்கள், பழ வகைகள், தேங்காய் பூ வைத்து படையிலிட்டு, கற்பூரம் ஏற்றி, தெய்வங்களையும், பித்ருக்களையும் வழிபட்டனர்.
புதியதாக திருமணமான தம்பதிகள், சுமங்கலி பெண்கள், தெய்வங்களை வழிபட்டு, புதிய தாலி சாரடுகளை மாற்றி, பழைய தாலி சாரடுகளை ஆற்றில் விட்டனர்.
தொடர்ந்து, ஏழை, எளிய மக்களுக்கு, அன்னதானம் வழங்கினர். அதேபோல, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள ஆறு, குளம், வாய்க்கால் ஆகிய நீர் நிலைகளிலும், படையலிட்டு வழிபாடு செய்தனர்.

