/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குமரன் குன்று கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா
/
குமரன் குன்று கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா
ADDED : ஜூலை 14, 2025 11:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; குமரன்குன்று கோவிலில் வரும் 20ம் தேதி ஆடி கிருத்திகை விழா நடைபெறுகிறது.
குமரன்குன்று, அருள்மிகு கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 61ம் ஆண்டு ஆடி கிருத்திகை விழா மற்றும் அருணகிரிநாதர் விழா வரும் 20ம் தேதி நடைபெறுகிறது.
காலை 9:00 மணிக்கு நாம ஜெபமும் கலச பூஜையும் நடக்கிறது. இதையடுத்து கல்யாண சுப்பிரமணியசாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடைபெறுகிறது.
காலை 11:00 மணிக்கு பஜனை நடைபெறுகிறது. மதியம் 12:30 மணிக்கு கல்யாண சுப்பிரமணிய சுவாமி திருவீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை ஆடி கிருத்திகை விழா குழுவினர் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.

