/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆவின் நிறுவனத்தில் தீபாவளிக்கு 22 டன் இனிப்பு வகை விற்பனை
/
ஆவின் நிறுவனத்தில் தீபாவளிக்கு 22 டன் இனிப்பு வகை விற்பனை
ஆவின் நிறுவனத்தில் தீபாவளிக்கு 22 டன் இனிப்பு வகை விற்பனை
ஆவின் நிறுவனத்தில் தீபாவளிக்கு 22 டன் இனிப்பு வகை விற்பனை
ADDED : அக் 19, 2025 09:20 PM
கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை ஆவினில், 22 டன் இனிப்பு வகைகள் தயார் செய்து ஐந்து கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு விற்பனையை காட்டிலும், 6 டன் அதிகம். அதே சமயம், ரூ.4.4 கோடி கூடுதலாக வருவாயை ஈட்டியுள்ளது.
கோவை சிறுவாணி சாலை, பச்சாபாளையத்தில் ஆவின் நிறுவனம் உள்ளது. நாளொன்றுக்கு, 2.25 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்து கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆண்டுதோறும் ஆவின் சார்பில், பால்கோவா, மைசூர்பாகு, கேரட் மைசூர்பாகு, குலாப்ஜாமூன், ரசகுல்லா, காஜு கத்லி, காஜுபிஸ்தா உள்ளிட்ட இனிப்பு வகைகள் தயாரித்து, விற்பனை செய்யப்பட்டது.
தீபாவளிக்காக இந்த ஆண்டு, கோவை ஆவினில் மொத்தம், 22 டன் இனிப்பு வகைகள் தயாரித்து, விற்பனை செய்யப்பட்டது.
ஆர்.எஸ்.புரம், பச்சாபாளையம் பகுதிகளோடு கோவையில் ஆறு இடங்களில், ஹைடெக் பார்லர் உள்ளன. இது தவிர, ஆவின் விற்பனை முகவர் மூலம் இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டன.
கடந்த ஆண்டு தீபாவளியின்போது, 16 டன் இனிப்பு வகைகள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு, 6 டன் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, ரூ.4.4 கோடி கூடுதலாக கிடைத்துள்ளது. இது தவிர, 35 டன்னுக்கு வெண்ணெய், நெய் உற்பத்தி செய்து, தீபாவளி விற்பனைக்காக, அனுப்பி வைக்கப்பட்டது.