/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தற்காலிக பணியாளர்களுக்கு போனஸ் வழங்கிய பல்கலை
/
தற்காலிக பணியாளர்களுக்கு போனஸ் வழங்கிய பல்கலை
ADDED : அக் 19, 2025 09:21 PM
கோவை: பாரதியார் பல்கலையில், நிரந்தர பணியாளர்கள் தவிர, டிரைவர்கள், அலுவலக உதவியாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள், துாய்மை பணியாளர்கள், உதவியாளர்கள், உதவி தொழில்நுட்ப அலுவலர்கள், ஜூனியர் இன்ஜினியர்கள், எலக்ட்ரீசியன்கள் என, தற்காலிக பணியாளர்களாக, 300 க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
பல்கலை சார்பில், இவர்களுக்கு ஆண்டுதோறும், தீபாவளி முன்பணம் வழங்கப்படும். இந்தாண்டு வழங்கப்படாததை கண்டித்து, உள்ளிருப்பு போராட்டம் நடத்த பல்கலை பணியாளர்கள் சங்கம் நடத்த திட்டமிடப்பட்டது. பணியாளர்கள் சங்கத்தினருடன், பல்கலை நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, தற்காலிக பணியாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் தீபாவளி முன்பணமாகவும், ஏழு மாத ஊதிய நிலுவைத் தொகை, 10 ஆயிரத்து, 221 ரூபாயை பல்கலை நிர்வாகம் வழங்கியது.