/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தல்
/
குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தல்
ADDED : அக் 19, 2025 09:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்: பவானி ஆற்றில் தண்ணீர் செந்நிறத்தில் வருவதால், தண்ணீரை காய்ச்சி குடிக்கும் படி, நகராட்சி கமிஷனர் அமுதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேட்டுப்பாளையம் நகராட்சியில் உள்ள, 33 வார்டு மக்களுக்கு தேவையான தண்ணீர், பவானி ஆற்றில் இருந்து எடுக்கப்படுகிறது. இந்த தண்ணீர், சாமண்ணா தலைமை நீரேற்று நிலையத்தில் சுத்தம் செய்யப்படுகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் மண் கலந்து செந்நிறமாக வருகிறது. எனவே பொதுமக்கள், இந்த குடிநீரை நன்கு காய்ச்சி, வடிகட்டி குடிக்கவும். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.