/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கைவிடப்பட்ட சி.என்.ஜி., பஸ் இயக்கம் வழிகாட்டு முறைகளால் மாற்றம்
/
கைவிடப்பட்ட சி.என்.ஜி., பஸ் இயக்கம் வழிகாட்டு முறைகளால் மாற்றம்
கைவிடப்பட்ட சி.என்.ஜி., பஸ் இயக்கம் வழிகாட்டு முறைகளால் மாற்றம்
கைவிடப்பட்ட சி.என்.ஜி., பஸ் இயக்கம் வழிகாட்டு முறைகளால் மாற்றம்
ADDED : ஏப் 16, 2025 09:40 PM
பொள்ளாச்சி, ; சோதனை அடிப்படையில், டவுன் பஸ்சில், சி.என்.ஜி., பொருத்தப்பட்டு இயக்கப்பட்டாலும், அதனை விரிவுபடுத்த முடியாமல் கை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில், அரசு போக்குவரத்து கழகம் வாயிலாக இயக்கப்படும் பஸ்களில், டீசலுக்கு மாற்றாக, சி.என்.ஜி., எனப்படும், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு வாயிலாக, பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, பொள்ளாச்சி கிளை 2ல், நடுப்புணிக்கு செல்லும் டவுன்பஸ், சி.என்.ஜி., பொருத்தப்பட்டு, சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டது. தொடர்ந்து, பிற டவுன் பஸ்சிலும், சி.என்.ஜி., பொருத்த திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த திட்டம், விரிவுபடுத்தப்படாமல் கைவிடப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
சோதனை ஓட்டத்தின் போது, எட்டு சிலிண்டர் பொருத்தப்பட்டு, 280 கிலோ சின்.என்.ஜி., நிரப்பப்பட்டது. அதன் வாயிலாக, தினமும், 70 முதல் 72 கிலோ வரை சி.என்.ஜி., செலவாகிறது என கண்டறியப்பட்டது.
ஒரு லிட்டர் டீசலுக்கு 5 முதல் 6 கி.மீ., துாரம் பஸ் இயக்கப்பட்டால், ஒரு கிலோ சி.என்.ஜி.,வாயிலாக 6.5 முதல் 7.5 கி.மீ., துாரம் வரை இயக்க முடியும்.
இருப்பினும், தினமும், காஸ் நிரப்ப வேண்டும், 50 கிலோவுக்கு குறைவாக காஸ் இருத்தல் கூடாது, சாவியில் மட்டுமே ஆப் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டு முறைகளை தொடர்ந்து பின்பற்றுவது, சாத்தியமானதும் கிடையாது.
பொள்ளாச்சியில், கிளை 3ல், புறநகர் பஸ் ஒன்று மட்டும் இயக்கப்படுகிறது. இந்த பஸ், நெகமம் வழியாக கோவைக்கு இயக்கப்படுகிறது. கோவையில் மட்டுமே சி.என்.ஜி., பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு, கூறினர்.