/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உலக சிலம்ப போட்டியில் ஏபிசி மாணவன் தங்கம்
/
உலக சிலம்ப போட்டியில் ஏபிசி மாணவன் தங்கம்
ADDED : செப் 20, 2024 10:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : உலக சிலம்பம் சம்மேளனம் சார்பில், கேரளாவில் நடந்த உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில், ஒன்பது நாடுகளைசேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, பள்ளி மாணவர்களும் கலந்துகொண்டனர்.
இதில், பீளமேடு, ஏபிசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் ஸ்ரீதர்ஷன், சிலம்பம் இரட்டை வாள் வீச்சுப் போட்டியில் கலந்துகொண்டார். போட்டியில் முதலிடம் பெற்று, தங்கப்பதக்கத்தை ஸ்ரீதர்ஷன் வென்றுள்ளார்.
மாணவனை, ஏபிசி பள்ளியின் தாளாளர் விஜயகுமார், முதல்வர் ஜனதாம்பிகை, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டினர்.