/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அப்துல் கலாம் பிறந்த நாள் விழா..
/
அப்துல் கலாம் பிறந்த நாள் விழா..
ADDED : அக் 15, 2025 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்: அப்துல் கலாம் பிறந்த நாள், உலக மாணவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தம்பு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். மேட்டுப்பாளையம் நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் சிவில் துறை தலைவர் சுகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கடந்த கல்வியாண்டில், 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கும், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், நினைவு பரிசுகளை வழங்கினார். விழாவில் தமிழ் ஆசிரியர் விவேகானந்தன் கவிதை வாசித்தார். பள்ளியின் கல்வி இயக்குனர் குணசேகர், உதவி தலைமை ஆசிரியர் மாடசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.