/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீபாவளி போனஸ் எப்போது? தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
/
தீபாவளி போனஸ் எப்போது? தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
ADDED : அக் 15, 2025 11:54 PM
சோமனூர்: தீபாவளி போனஸ் எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில், விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளனர்.
வரும், 20ம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே, போனஸ் மற்றும் புத்தாடையும், பட்டாசும் தான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும். அதுபோலவே விசைத்தறி சார்ந்த தொழிலாளர்களின் எதிர்பார்ப்பும் போனஸ் குறித்துதான் இருக்கும்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், போனஸ் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பெரும்பாலான தொழிலாளர்கள் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதால், சொந்த ஊருக்கு சென்று உறவினர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடதிட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில்,' இரு நாட்களுக்குள் போனஸ் வழங்கப்படும் என, எதிர்பார்த்துள்ளோம். போனஸ் வாங்கியவுடன் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்,' என்றனர்.