/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்தால் ரூ.25 லட்சம் நஷ்டஈடுக்கு தீர்மானம்: தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை
/
வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்தால் ரூ.25 லட்சம் நஷ்டஈடுக்கு தீர்மானம்: தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை
வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்தால் ரூ.25 லட்சம் நஷ்டஈடுக்கு தீர்மானம்: தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை
வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்தால் ரூ.25 லட்சம் நஷ்டஈடுக்கு தீர்மானம்: தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை
ADDED : அக் 15, 2025 11:53 PM
பெ.நா.பாளையம்: -: வனவிலங்குகள் தாக்கி உயிரிழக்கும் நபர்களுக்கு தமிழக அரசு, 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என, தமிழக விவசாயிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் கூட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் கவுண்டம்பாளையத்தில் மாநில தலைவர் வேணுகோபால் தலைமையில் நடந்தது.
கோவை மாவட்ட தலைவர் வேலுசாமி, பி.ஆர். கார்டன் உரிமையாளர் சுபாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் வேலுச்சாமி, காரமடை வெங்கடேஷ், கோவனூர் பெருமாள்சாமி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
கூட்டத்தில், காட்டுப் பன்றி பெருக்கத்தை கட்டுப்படுத்த கேரளா அரசு பின்பற்றும் நடைமுறையை, தமிழக அரசும் பின்பற்ற வேண்டும் என, தமிழக அரசை தமிழக விவசாயிகள் சங்கம் கேட்டுக்கொண்டது.
வனத்துக்கு வெளியே காட்டு பன்றிகளை கொல்பவர்கள் மீது வனத்துறை நடவடிக்கை எடுத்தால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை திரட்டி முற்றுகையிடுவது என, முடிவு செய்யப்பட்டது.
காட்டு பன்றிகளைப் போல மான்களும், விவசாய விளை பொருள்களை அழிப்பதால், வெளிநாடுகளில் ஆண்டுக்கு சில மாதங்கள், மான்களை வேட்டையாட அனுமதிப்பது போல, நம் நாட்டிலும் நடைமுறைப்படுத்தி மான்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். தொடர்ந்து ஆடு, மாடுகளை வேட்டையாடும் சிறுத்தையை பிடித்து தீர்வு காண முடியவில்லை என்றால், குறிப்பிட்ட சிறுத்தையை கொன்றாவது ஆடு, மாடுகளை வனத்துறையினர் காக்க வேண்டும்.
கள்ளச்சாராயம் குடித்து இறப்பவர்களுக்கு அரசாங்கம், 10 லட்ச ரூபாய் வழங்குகிறது. கூட்ட நெரிசலில் சிக்கி இறப்பவர்களுக்கு, 35 லட்ச ரூபாய் கிடைக்கிறது. யானை, காட்டுப்பன்றி, பாம்பு மற்றும் வன விலங்குகள் தாக்கி இறக்கும் மக்களுக்கு, தமிழக அரசு, 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முன்வர வேண்டும்.
அதேபோல குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.