/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவர் கைது
/
போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவர் கைது
போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவர் கைது
போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவர் கைது
ADDED : அக் 15, 2025 11:53 PM

அன்னுார்: கொடுக்கல் வாங்கல் தகராறில், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அன்னுார் போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
அன்னுார் அருகே போயனுாரைச் சேர்ந்தவர் பிரகாஷ், 38. ஆட்டோ டிரைவர். இவரது மனைவி திவ்யா. திவ்யாவும், கஞ்சப்பள்ளியைச் சேர்ந்த பா.ஜ., மகளிரணி நிர்வாகி பிரபாவதியும் ஓராண்டுக்கு முன்பு அறக்கட்டளை துவக்கியுள்ளனர்.
அறக்கட்டளையில் நஷ்டம் ஏற்பட்டதால் கலைத்து விட்டனர். இதில் திவ்யாவுக்கு பிரபாவதி 10 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று கூறி காசோலை வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரபாவதி, கோவை எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், 'திவ்யா மற்றும் அவரது கணவர் பிரகாஷ் இருவரும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அனைவரிடமும் கூறி மிரட்டுகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மனு அளித்தார்.
இதையடுத்து இரு தரப்பினரும் நேற்று அன்னுார் போலீஸ் ஸ்டேஷன் வந்தனர். அப்போது போலீஸ் ஸ்டேஷன் வாசலில் திடீரென பிரகாஷ் கையில் எடுத்து வந்த பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த டீசலை தனது உடல் மீது ஊற்றிக் கொண்டார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த எஸ்.ஐ., கனகராஜ், தயாநிதி ஆகியோர் உடனே அவரை மடக்கிப் பிடித்தனர். மீதி உள்ள டீசல் பாட்டிலை பறிமுதல் செய்தனர். பின்னர் பிரகாஷ் மீது தண்ணீர் ஊற்றினர். தற்கொலைக்கு முயன்றதாக ஆட்டோ டிரைவர் பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
பிரகாஷ் கூறுகையில், பா.ஜ., மாவட்ட நிர்வாகிகள் காசோலை வழக்கை வாபஸ் பெறும்படி மிரட்டுகின்றனர்,'' என்றார்.
இதுகுறித்து பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து கூறுகையில், 'பிரகாஷ் கூறுவது பொய்யான புகார்' என்றார்.