/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிடித்தம் செய்த ரூ.34 லட்சம் விடுவிப்பு
/
பிடித்தம் செய்த ரூ.34 லட்சம் விடுவிப்பு
ADDED : அக் 15, 2025 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்: காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் 17 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்வதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் பதிவு செய்துள்ளனர்.
இவர்கள் பணி செய்ய ஒதுக்கீடு செய்த தொகையில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை காரமடை வட்டார ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் பிடித்தம் செய்திருந்தது. இந்த தொகையை பணிகள் செய்து முடித்த பின், அதிகாரிகள் பணிகளை ஆய்வு செய்த பிறகு, ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்.
அதன்படி 114 ஒப்பந்ததாரர்களுக்கு, பிடித்தம் செய்யப்பட்டிருந்த ரூ. 34 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது.-----